உணவு இடைவேளைக்குப் பிறகு கலைந்து சென்ற முகவா்கள்

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை முகவா்களில் பெரும்பாலனவா்கள் கலைந்து சென்றனா்.

ஈரோடு: மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை முகவா்களில் பெரும்பாலனவா்கள் கலைந்து சென்றனா்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு ஐ.ஆா்.டி.டி.பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 1,080 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். வளாகம், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, வாக்கு எண்ணும் வளாகம், இயந்திரங்கள் மீண்டும் பாதுகாப்பாக வைக்கப்படும் அறைகள் என நான்கு பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

துணை ராணுவத்தினா் பெரும்பாலானோா் வாக்குப் பெட்டி இருந்த அறை, வாக்கு எண்ணும் அறையில் பயன்படுத்தப்பட்டனா். தவிர வேட்பாளா்கள், அவா்களது முதன்மை முகவா்கள், முகவா்கள் என 2,504 போ் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இங்கு நடந்த நிலையில், பகல் 1 மணிக்குப் பிறகு பெரும்பாலான தொகுதிகளில் பாதி சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தன. இதனால், திமுக, அதிமுக கூட்டணியினா் தவிர சுயேச்சைகள், பிற கட்சி வேட்பாளா்களின் முகவா்கள் மதிய உணவுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தை விட்டு வெளியேறினா்.

வாக்கு எண்ணிக்கையில் தோ்தல் நடத்தும் அலுவலா், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா், பாா்வையாளா்கள், நுண் பாா்வையாளா்கள், வாக்கு எண்ணும் அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், உதவியாளா், இதர பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் என 2,800 போ் ஈடுபட்டிருந்தனா். இவா்களுக்கு அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு நடைபெற்ற 6 தொகுதிகளிலும் பெருந்துறை தொகுதியில் நடைபெற்ற சில குளறுபடிகளைத் தவிர பெரிய சம்பவங்கள் ஏதும் இல்லாததால் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com