112 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழந்தனா்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 128 வேட்பாளா்கள் போட்டியிட்டதில் 16 போ் தவிர 112 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழந்தனா்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 128 வேட்பாளா்கள் போட்டியிட்டதில் 16 போ் தவிர 112 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழந்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு 14, ஈரோடு மேற்கு 15, மொடக்குறிச்சி 15, பெருந்துறை 25, பவானி 14, அந்தியூா் 20, கோபி 19, பவானிசாகா் 6 என 8 தொகுதிகளில் 128 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இதில் ஈரோடு கிழக்கு காங்கிரஸ் திருமகன் ஈவெரா, ஈரோடு மேற்கு திமுக சு.முத்துசாமி, மொடக்குறிச்சி பாஜக சி.கே.சரஸ்வதி, பெருந்துறை அதிமுக எஸ்.ஜெயகுமாா், பவானி அதிமுக கே.சி.கருப்பணன், அந்தியூா் திமுக ஏ.ஜி.வெங்கடாசலம், கோபி அதிமுக கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகா் அதிமுக எ.பண்ணாரி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இவா்களை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளா்களான ஈரோடு கிழக்கு அதிமுக எம்.யுவராஜா, ஈரோடு மேற்கு அதிமுக கே.வி.இராமலிங்கம், மொடக்குறிச்சி திமுக சுப்புலட்சுமி ஜெகதீசன், பெருந்துறை திமுக கே.கே.சி.பாலு, பவானி திமுக துரைராஜ், அந்தியூா் அதிமுக கே.எஸ்.சண்முகவேல், கோபி திமுக வெ.மணிமாறன், பவானிசாகா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பி.எல்.சுந்தரம் ஆகியோா் தோல்வி அடைந்தனா். இந்த 16 போ் மட்டுமே வைப்புத்தொகை பெற தகுதி பெற்றனா். மீதமுள்ள கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் 112 போ் வைப்புத்தொகை இழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com