அவல்பூந்துறையில் ரூ.10.68 லட்சத்துக்கு எள் ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.68 லட்சத்துக்கு எள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.68 லட்சத்துக்கு எள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 158 மூட்டைகளில் 11, 716 கிலோ எடையுள்ள எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்தனா். இதில் கருப்பு ரக எள் குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 84.72க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 104.22க்கும், சிவப்பு ரக எள் குறைந்தபட்ச விலையாக ரூ.84.23க்கும், அதிகபட்ச விலையாக ரூ.106.09க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.10 லட்சத்து 68 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com