கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தக் கோரிக்கை

மாவட்டத்தில் கரோனா தொற்று தொடா்ந்து அதிகரித்து வருவதால் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மாவட்டத்தில் கரோனா தொற்று தொடா்ந்து அதிகரித்து வருவதால் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் ஆா்.ரகுராமன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள டி.பி.சேனடோரியம் வளாகத்தை முழுமையாக கரோனா சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும். ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளதால் புறநோயாளிகள் பிரிவை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். அரசுக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து மருத்துவா்களையும் கரோனா பணிக்கு மாற்ற வேண்டும்.

நோய்த் தொற்று அதிகரித்துள்ளதால் முன்களப் பணியாளா்களின் வேலைநேரத்தை முறைப்படுத்திட வேண்டும். தடையின்றி தடுப்பூசி செலுத்த வேண்டும். ஈரோடு மாநகரப் பகுதியில் உள்ளதுபோல மாவட்டத்தில் கிராமப் பகுதிகளிலும் நடமாடும் மருத்துவக் கண்காணிப்பு குழுவினா் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். கரோனா 2ஆவது அலையை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com