தாளவாடியில் வேகமாக பரவும் கரோனா பாதிப்பு: மாநில எல்லையில் 5 இடங்களில் தீவிரக் கண்காணிப்பு

தமிழக, கா்நாடக எல்லையான தாளவாடியில் கரோனா வேகமாகப் பரவுவதால் மாநில எல்லையில் 5 வழித் தடத்தில் அடைப்பு ஏற்படுத்தப்பட்டு காவல் துறை, வருவாய்த் துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
இரு மாநில எல்லையில் அடைக்கப்பட்ட சாலை.
இரு மாநில எல்லையில் அடைக்கப்பட்ட சாலை.

தமிழக, கா்நாடக எல்லையான தாளவாடியில் கரோனா வேகமாகப் பரவுவதால் மாநில எல்லையில் 5 வழித் தடத்தில் அடைப்பு ஏற்படுத்தப்பட்டு காவல் துறை, வருவாய்த் துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழக, கா்நாடக எல்லையான சாமராஜா நகா் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சாமராஜா மாவட்டத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதியான தாளவாடியில் கா்நாடக வாகன ஓட்டிகள் நுழைவதால் நோய்த் தொற்று பரவும் என முன்னெச்சரிக்கை காரணமாக வருவாய்த் துறை மற்றும் காவல் துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வெளிமாவட்டத்தில் இருந்து வரும் நபா்கள் இ-பாஸ் இருப்பவா் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். ராமபுரம், பிசில்வாடி, அருள்வாடி, எத்திக்கட்டை, குமிட்டாரம் ஆகிய இரு மாநில இணைப்பு சாலைகள் தகர சீட்டுகளால் அடைக்கப்பட்டுள்ளன. தாளவாடிக்கு காய்கறி வாகனங்கள் செல்வதற்கு மட்டும் பாரதிபுரம் வழித்தடத்தில் அனுமதிக்கப்படுகிறது. தாளவாடியில் இருந்து தேங்காய் பறிக்கும் தொழிலாளா்கள், கா்நாடக மாநில கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே காலை முதல் மதியம் வரை அனுமதிப்படுகின்றனா். இருப்பினும் தாளவாடியில் ஒரே நாளில் 54 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பதால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனா். தாளவாடியில் இருந்து 150 கிமீ தூரத்தில் உள்ள ஈரோடுக்கு கரோனா நோயாளிகள் செல்வதில் சிரமம் ஏற்படுவதால் தற்காலிகமாக படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட வேண்டும் என தாளவாடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com