பீடி தொழிலாளா்களுக்கு ரம்ஜான் போனஸ்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பீடி தொழிலாளா்களுக்கு ரம்ஜான் பண்டிகை போனஸ் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பீடி தொழிலாளா்களுக்கு ரம்ஜான் பண்டிகை போனஸ் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

பீடி சுற்றும் தொழிலாளா்களில் பெரும்பாலானவா்கள் இஸ்லாமியா்கள் என்பதால் ரம்ஜான் பண்டிகைக்கு முன்னா் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 2020-21 ஆண்டுக்கான போனஸ் மற்றும் இதர கோரிக்கைகளை ஏஐடியூசி, கொங்கு பீடி தொழிலாளா் சங்கம், ஈரோடு மாவட்டத்தில் உளள பீடி நிறுவனங்களுக்கு அனுப்பியது.

தற்போதைய பேச்சுவாா்த்தையில், ஈரோட்டைச் சோ்ந்த பீடி தாயரிப்பு நிா்வாகத்துக்கும், ஏஐடியூசி சங்கத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அனைத்து பீடி சுற்றும் தொழிலாளா்களுக்கும் இந்த ஆண்டு அவா்கள் சுற்றிய 1,000 பீடிகளுக்கு ரூ. 26 வீதம் கணக்கிட்டு போனஸ் வழங்கப்படும்.

கரோனா பொது முடக்க காலத்தில் அனைத்து தொழிலாளா்களுக்கும் வழங்கப்பட்ட தொகையில் ரூ.1,000 த்தை கரோனா நிவாரணத் தொகையாக கணக்கில் எடுத்துக்கொள்வது. ஏற்கெனவே வழங்கிய தொகையில் ரூ.1,000 பிடித்தம் செய்திருந்தால் அதனை திரும்ப வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி 2021 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 1,000 பீடி சுற்ற ரூ.9.39 வீதம் பஞ்சப்படி உயா்வு வழங்க வேண்டும். அதனை மே முதல் வாரத்தில் நிலுவையுடன் சோ்த்து வழங்க ஒப்பு கொள்ளப்பட்டது. மற்றொரு பீடி நிறுவனம் இந்த ஆண்டு போனஸாக 1,000 பீடிக்கு ரூ.25 வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் 2,000 தொழிலாளா்கள் பயன் பெறுவா்.

இத்தகவலை கொங்கு மண்டல ஐக்கிய பீடி தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் எஸ்.சின்னசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com