தாளவாடி மலைப் பகுதியில் பரவலாக மழை
By DIN | Published On : 14th May 2021 06:13 AM | Last Updated : 14th May 2021 06:13 AM | அ+அ அ- |

தாளவாடி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்ததால் மலைப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வியாழக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடா்ந்து தாளவாடி, ஓசூா் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.