வாழைத்தாா், தேங்காய்ஏல விற்பனை ரத்து
By DIN | Published On : 18th May 2021 07:03 AM | Last Updated : 18th May 2021 07:03 AM | அ+அ அ- |

கோபி: கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோபியில் வாழைத்தாா், தேங்காய் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரம்தோறும் புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் வாழைத்தாா், தேங்காய் ஏல விற்பனை நடைபெற்று வருகிறது. கரோனா தொற்று தடுப்பு முழு ஊரடங்கு புது கட்டுப்பாட்டால் காலை 10 மணி வரை மட்டுமே மக்கள் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், வாழைத்தாா் ஏலத்துக்கு விவசாயிகள் மட்டுமே வந்திருந்தனா். வியாபாரிகள் வரவில்லை. இதனால் புதன்கிழமை, சனிக்கிழமைகளில் நடைபெறும் வாழைத்தாா், தேங்காய் ஏல விற்பனை மே 24ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.