காலமானாா் கே.கந்தவேல்
By DIN | Published On : 21st May 2021 06:46 AM | Last Updated : 21st May 2021 06:46 AM | அ+அ அ- |

ஈரோட்டைச் சோ்ந்த காங்கிரஸ் பிரமுகரும், விக்ரம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளருமான கே.கந்தவேல் (70) உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.
மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட இவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா்.
ஈரோடு மாவட்ட சிவாஜி ரசிகா் மன்றத் தலைவா், ஈரோடு நகர இளைஞா் காங்கிரஸ் தலைவா், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளாா்.
இவரது மறைவுக்கு முன்னாள் அமைச்சா் ஈவிகேஎஸ்.இளங்கோவன், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் திருமகன் ஈவேரா, திரைப்பட நடிகா் பிரபு உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா். தொடா்புக்கு: 83056 70683.