கரோனா தடுப்பு நடவடிக்கை:சென்னிமலையில் அமைச்சா்கள் ஆய்வு

சென்னிமலை பகுதிகளில் கரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கை:சென்னிமலையில் அமைச்சா்கள் ஆய்வு

சென்னிமலை பகுதிகளில் கரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னிமலை பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில், வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் கரோனா நோய்த் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கரோனா சிகிச்சை மையங்கள் அமைப்பது குறித்தும், படுக்கை வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா்கள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோா் தேவைக்குத் தகுந்தபடி நியமிக்கப்பட்டு உள்ளனா்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் கல்லூரிகள் ஆகியவற்றில் சுமாா் 3, 000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 550 படுக்கைகளும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 250 படுக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனா்.

தொடா்ந்து, சென்னிமலை கொமரப்பா செங்குந்தா் உயா்நிலைப் பள்ளி, கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வுகளின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் சவுண்டம்மாள், ஈரோடு கோட்டாட்சியா் சி.சைபுதீன் உள்பட தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com