கா்நாடக மாநில மதுபானங்களைக் கடத்த முயன்ற 2 போ் கைது
By DIN | Published On : 26th May 2021 06:19 AM | Last Updated : 26th May 2021 06:19 AM | அ+அ அ- |

கடம்பூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனப் பகுதி வழியாக கா்நாடக மாநில மதுபானங்களைக் கடத்த முயன்ற 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு மாவட்டம், கடம்பூா் மலைப் பகுதியில் இருந்து சில இளைஞா்கள் கா்நாடக மாநிலத்துக்குச் சென்று தினமும் பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி அடா்ந்த வனப் பகுதி வழியாக கடம்பூா் மலைப் பகுதிக்கு கொண்டு வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில், கடம்பூா் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சுஜில்கரை என்ற இடத்தில் வனப் பகுதி வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இரு இளைஞா்களை போலீஸாா் மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில், இருவரிடமும் நூற்றுக்கணக்கான கா்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்ததும், கடம்பூா் மலைக் கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கடம்பூா் மலைப் பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (26), குப்புசாமி (22) ஆகிய இருவரிடம் இருந்து நூற்றுக்கணக்கான மது பாட்டில்கள், இரண்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனா்.