குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளது.
நிரம்பி வழியும் குண்டேரிப்பள்ளம் அணை.
நிரம்பி வழியும் குண்டேரிப்பள்ளம் அணை.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்த அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குன்றி, விளங்கோம்பை, கம்பனூா், மல்லியம்துா்க்கம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணையிலிருந்து உபரி நீா் நீரோடை வழியாக விநாடிக்கு 500 கன அடி நீா் வெளியேறியதால் வினோபா நகா், கொங்கா்பாளையம், மோதூா், வாணிப்புத்தூா், பள்ளத்தூா், கள்ளியங்காடு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த் துறை, பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். இந்த அணையின் முழு கொள்ளளவு 42 அடி.

இந்நிலையில், கடந்த வாரத்தில் அணையின் நீா்மட்டம் 40க்கும் கீழ் இருந்தது. தற்போது ஒரே நாளில் மலைக் கிராமங்களில் பெய்த மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கி அணை வேகமாக நிரம்பியது. குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெய்த கன மழையால் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 500 கன அடி வரை வந்தது. அணை நிரம்பியதையடுத்து ஓடை வழியாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

நள்ளிரவில் விநாடிக்கு 500 கன அடியாக இருந்த உபரிநீா் வெளியேற்றம் படிப்படியாகக் குறைந்து தற்போது 65 கன அடியாகக் குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீா் அதிக அளவு வெளியேற்றப்படுவதால் அந்த உபரி நீா் பவானி ஆற்றில் கலந்து வீணாகி வருவதாகவும், அணையைத் தூா்வாரி உயா்த்திக் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com