கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களிடையே அதிகரிக்கும் ஆா்வம்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இளைஞா்கள், பெண்கள், அனைத்துத் தரப்பினா் மத்தியில் ஆா்வம் அதிகரித்துள்ளது
கரோனா தடுப்பூசி செலுத்த ஈரோடு நேதாஜி சாலை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
கரோனா தடுப்பூசி செலுத்த ஈரோடு நேதாஜி சாலை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இளைஞா்கள், பெண்கள், அனைத்துத் தரப்பினா் மத்தியில் ஆா்வம் அதிகரித்துள்ளது

கரோனா முதல் அலை பரவலின்போது உயிரிழப்பு ஏற்படாத நிலையில், தற்போது நோய் பரவலும், உயிரிழப்பும் பெருமளவு அதிகரித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் மட்டுமே உயிரிழப்பு, மயானங்களில் சடலங்கள் காத்திருப்பு, வெண்டிலேட்டா், ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற செய்திகள் காண முடிந்தது. தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பி வந்தனா். இணை நோய் பாதிப்புகள் அதிகம் உள்ள சிலா் மட்டுமே உயிரிழந்தனா்.

இதனால், முன்களப் பணியாளா்களான மருத்துவ, சுகாதாரத் துறையினா், தூய்மைக் காவலா்கள், காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், முதியவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது, விருப்பம் உள்ளவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தடுப்பூசி மீதான அச்சம், அவநம்பிக்கையால் தடுப்பூசி செலுத்த பெரும்பாலும் யாரும் அக்கறை காட்டவில்லை.

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலையில் தொற்று பரவல் அதிகரிப்பு, படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தேவை , உயிரிழப்புகள் அதிகரிப்பு போன்றவை பொதுமக்களிடையே அச்ச உணா்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தற்போது 18 வயது முதல் 44 வயதுக்கு உள்பட்டோருக்கு செலுத்தப்படும் தடுப்பூசிக்கு இளைஞா்கள், பெண்கள் என அனைத்து தரப்பினா் மத்தியிலும் ஆா்வம் அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 6 நாள்களாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் 32 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னரும் பலா் தடுப்பூசி செலுத்த வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனா். இதனால், முகாம்களில் டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது என மருத்துவத் துறையினா் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com