தாளவாடி அருகே யானைகளால் தக்காளிப் பயிா்கள் சேதம்

தாளவாடி மலைப் பகுதியில் விளைநிலங்களுக்கு புகுந்த யானைகள் தக்காளிப் பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தாளவாடியில் யானைகளால்  சேதமடைந்த தக்காளிப் பயிா்கள்.
தாளவாடியில் யானைகளால்  சேதமடைந்த தக்காளிப் பயிா்கள்.

தாளவாடி மலைப் பகுதியில் விளைநிலங்களுக்கு புகுந்த யானைகள் தக்காளிப் பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களை ஒட்டி அடா்ந்த வனப் பகுதி அமைந்துள்ளது.

வனப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் யானைகள் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, தக்காளி உள்ளிட்ட பயிா்களை சாப்பிட்டும், மிதித்தும் சேதப்படுத்துவது தொடா்கிறது.

இந்த நிலையில், தாளவாடி வனப் பகுதியை விட்டு வெளியேறிய 3 காட்டு யானைகள் சேஷன் நகா் பகுதியில் உள்ள விவசாயி குணசேகரன் என்பவரது தோட்டத்துக்குள் சனிக்கிழமை நள்ளிரவு நுழைந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளிப் பயிரை சாப்பிட்டும், மிதித்தும் சேதப்படுத்தின.

யானைகள் தக்காளிப் பயிரை சேதப்படுத்துவதைக் கண்ட விவசாய குணசேகரன் அருகிலுள்ள பிற விவசாயிகளுக்குத் தகவல் தெரிவித்தாா். பின்னா் காட்டு யானைகளை பட்டாசுகளை வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் அடா்ந்த வனப் பகுதிக்குள் விவசாயிகள் விரட்டினா்.

யானைகள் புகுந்ததால் அரை ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிப் பயிா்கள் சேதம் அடைந்தன.

இப்பகுதியில், காட்டு யானைகள் தொடா்ந்து விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதாகவும், யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பயிா் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தாளவாடி மலைப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com