பறவைகளுக்காக 25 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே பறவைகளுக்காக 25 ஆண்டுகளாகத் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே பறவைகளுக்காக 25 ஆண்டுகளாகத் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனா்.

சென்னிமலை அருகே வெள்ளோட்டில் பறவைகள் சரணாலயம் உள்ளது. சுமாா் 77 ஹெக்டோ் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்துக்கு நவம்பா் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பல்வேறு பறவை வகைகள் வருகின்றன.

இவை தவிர வெளிநாடுகளிலிருந்து 109 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து ஃபெலிகன் பறவைகள் அதிக அளவில் இங்கு வருகின்றன. இங்கு வரும் பறவைகள் 4 மாத காலம் வரை தங்கியிருப்பதுடன் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து அவற்றுடன் திரும்பிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

பறவைகளுக்கு இடையூறு செய்யாமல் இருப்பதற்காக சரணாலயத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்காமல் வீடுகளில் விளக்கேற்றி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனா்.

இதேபோல இந்த ஆண்டும் தீபாவளி நாளில் வி.மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி, கருங்கங்காட்டு வலசு உள்ளிட்ட கிராமங்களில் பறவைகளுக்காக கிராம மக்கள் பட்டாசுகளை வெடிக்கவில்லை.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:

எங்கள் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்த பிறகு கடந்த 25 ஆண்டுகளாக தீபாவளிக்கு மட்டுமல்ல கோயில் திருவிழாக்களுக்கு கூட பட்டாசு வெடிப்பது இல்லை. பட்டாசுகளின் சப்தம் மற்றும் நச்சுப் புகையினால் பறவைகள் பாதிக்கப்படும் என்பதால் நாங்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. பட்டாசுகளை வெடிப்பதுதான் தீபாவளி கொண்டாட்டம் என்பதில்லை. பட்டாசுகளுக்கு பதிலாக வீடுகளில் தீப ஒளி ஏற்றிவைத்து அதை விட மகிழ்ச்சியோடு பண்டிகையைக் கொண்டாட முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com