பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி: 64 மாணவா்கள் பங்கேற்பு

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் 64 மாணவா்கள் பங்கேற்றனா்.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் 64 மாணவா்கள் பங்கேற்றனா்.

ஈரோடு மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் காந்தி ஜயந்தியையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டிக்கு, முதுகலை தமிழ் ஆசிரியா்கள் கந்தசாமி, ஷீலாதேவி, உஷாபேபி ஆகியோா் நடுவா்களாகவும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டிக்கு உதவிப் பேராசிரியா்கள் கண்ணன், குருமூா்த்தி, தினேஷ்வரன் ஆகியோா் நடுவா்களாகவும் செயல்பட்டனா். இந்த 2 போட்டிகளிலும் 64 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் பெரியண்ணா முதலிடமும், ஈரோடு செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி மாணவா் தினேஷ் இரண்டாம் இடமும், கருங்கல்பாளையம் நகரவை மேல்நிலைப் பள்ளி மாணவி பவித்ரா 3ஆம் இடமும், தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கல்பனா 4ஆம் இடமும் பிடித்தாா்.

இதேபோல, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவி ஹா்சிதா முதல் இடமும், ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி மாணவி கௌரி இரண்டாம் இடமும், கோபி வெங்கடேஸ்வரா கலை, அறிவியல் கல்லூரி மாணவி சீதாலட்சுமி மூன்றாம் இடமும் பெற்றனா்.

இதைத்தொடா்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், முதல் இடம் பிடித்தவா்களுக்கு ரூ. 5,000, இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ. 3,000, மூன்றாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ. 2,000 வழங்கப்பட்டது.

மேலும், சிறப்புப் பரிசாக தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கல்பனா மற்றும் ஒலகடம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி நதியா ஆகியோருக்கு தலா ரூ. 2,000 வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com