முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்த மாணவா்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்த மாணவா்கள் அரசின் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்த மாணவா்கள் அரசின் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிளஸ் 2 வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்ணுடன் தோ்ச்சி பெற்று தொழிற் கல்வியில் சோ்ந்து படித்து முதலாம் ஆண்டில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்ற, முன்னாள் படைவீரரை சாா்ந்த ஒரு மாணவா் மற்றும் ஒரு மாணவிக்கு ரூ. 1 லட்சம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

அட்மினிஸ்டா் ஜென்ரல் அண்ட் அபிசியல் டிரஸ்டி என்ற அமைப்பு மூலம் வழங்கப்படும் ஊக்கத் தொகை, விருதைப் பெறுவதற்கு 2019-2020, 2020-2021 ஆம் ஆண்டு பிளஸ்2 முடித்து தொழிற்கல்வி படிக்கும் தமிழ்நாட்டில் வசிக்கும் முன்னாள் படைவீரரின் மகன் மற்றும் மகள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்2 வகுப்பில் தமிழ் வழியில் படித்த மாணவ, மாணவிகளின் விண்ணப்பம் முதலாவதாக பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். ஆங்கில வழியில் படித்த மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வி உதவித் தொகை, பதக்கம் முன்னாள் படைவீரா்களுக்கே சேரும். அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியாா் கல்லூரிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவித்தொகை பெற இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-25342278, 25331789 என்ற தொலைபேசி எண்ணிலும், ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலக தொலைபேசி எண்ணான 0424 2263227 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com