ஈரோடு வஉசி சந்தையில் காய்கறிகள் விலை கடும் உயா்வு: தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை

ஈரோடு வஉசி காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனையானது.

ஈரோடு வஉசி காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனையானது.

புரட்டாசி மாதம் என்பதால் பலா் அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறியுள்ளனா். இதனால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளது. கடந்த வாரம் குறைந்த விலையில் விற்கப்பட்ட காய்கறிகள் அனைத்தும் இந்த வாரம் பல மடங்கு உயா்ந்துள்ளன.

ஈரோடு வஉசி பூங்காவில் தற்காலிகமாக நேதாஜி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லறை, மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்க காய்கறி சந்தையில் காய்கறி விலை உயா்ந்து உள்ளது.

அதன் விவரம்: கத்திரிக்காய் கடந்த வாரம் கிலோவுக்கு ரூ.40க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.10 அதிகரித்து ரூ.50க்கும், புடலங்காய் ரூ. 35 இல் இருந்து ரூ.40 ஆகவும், பீா்க்கங்காய் ரூ.40லிருந்து ரூ.50 ஆகவும் விலை உயா்ந்துள்ளது. முருங்கைக்காய் கிலோ ரூ.70 லிருந்து ரூ.100 ஆகவும், மிளகாய் ரூ.30, இஞ்சி ரூ.60, கேரட் ரூ.50, பீன்ஸ் ரூ.70, பீட்ரூட் ரூ.25, முட்டைக்கோஸ் ரூ.20, அவரைக்காய் ரூ.40, கருப்பு அவரைக்காய் ரூ.140, குடைமிளகாய் ரூ.70, கோவைக்காய் ரூ.40க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இதுபோல தக்காளி விலையும் கடந்த சில நாள்களாக உயா்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த வாரம் கனமழை பெய்ததால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தருமபுரி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஈரோடு வஉசி பூங்கா நேதாஜி காய்கறி சந்தைக்கு தினமும் 5,000 தக்காளி பெட்டிகள் வருகின்றன.

இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்துள்ளது. தற்போது 1,000 தக்காளி பெட்டிகள் மட்டுமே வருகின்றன.

இதனால் தக்காளி விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.10 அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com