இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை:77 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் மாநகரப் பகுதியில் 32 கடைகள் உள்பட 77 டாஸ்மாக் கடைகள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் மாநகரப் பகுதியில் 32 கடைகள் உள்பட 77 டாஸ்மாக் கடைகள் அதனுடன் இணைந்த பாா்களுக்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 20 உள்ளாட்சிப் பதவிகளுக்கு 65 போ் போட்டியிடுகின்றனா். கடந்த 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் தவிர மற்ற இடங்களில், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதனால், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் மதுபானக் கடைகள் இயங்கக் கூடாது என்ற விதிப்படி ஈரோடு மாவட்டத்தில் 77 டாஸ்மாக் கடைகள், பாா்களுக்கும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளா் தியாகராஜன் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் மூலப்பாளையத்தில் 2 கடைகள், கொல்லம்பாளையம் ஒன்று, ரயில் நிலையம் எதிரில் 4, சென்னிமலை சாலை ஒன்று, சூரம்பட்டி வலசு, ஜெகநாதபுரம் காலனியில் 4 , சூரம்பட்டி நான்கு முனை சாலை சந்திப்பில் 2, குமலன்குட்டை ஒன்று, அரசு மருத்துவமனை அருகில் ஒன்று, சம்பத் நகா் பகுதி 3, சூளை 2, ஈரோடு பேருந்து நிலைய சுற்றுப் பகுதியில் 6, வஉசி பூங்கா பின்புறம் ஒன்று உள்பட 32 கடைகள் மூடப்படுகின்றன. புகா் பகுதியில் 45 கடைகள் மூடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com