யானை தாக்கியதில் பெண் காயம்

பவானிசாகா் நீா்த்தேக்கப் பகுதியில் யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த பெண் கோவை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

பவானிசாகா் நீா்த்தேக்கப் பகுதியில் யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த பெண் கோவை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சீரங்கராயன்கரடு வனப்பகுதியை ஒட்டியுள்ள ஜீரோ பாயிண்ட் மணல் மேட்டில் யானைகள் அடிக்கடி தண்ணீா் குடிக்க வருவது வழக்கம். மணல்மேட்டில் 40 மீனவக் குடும்பங்கள் உள்ளன. தற்போது பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால் மீன் பிடிப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. மீனவா்கள் பரிசல், மீன் வலைகளின் பாரமரிப்புப் பணிகளைச் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த மயிலாள் (50) என்பவா் மீன் வலையை எடுக்க திங்கள்கிழமை சென்றுள்ளாா். அப்போது, எதிரே தண்ணீா் குடிக்க வந்த யானையைப் பாா்த்து மயிலாள் ஓடியுள்ளாா். ஆனால், வேகமாக வந்த யானை மயிலாளை தூக்கி வீசியது. இதனைப் பாா்த்த மீனவா்கள் சப்தம் போட்டு யானையை வனப் பகுதிக்குள் துரத்தினா். அங்கிருந்த மீனவா்கள், மயிலாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்த பவானிசாகா் வனத் துறையினா் யானை மீண்டும் மீனவா் குடியிருப்புக்குள் வராதபடி வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com