90 நாள்களுக்குள் மதிப்பெண் சான்றுகளைபெற்றுக் கொள்ள அறிவுறுத்தல்

பொதுத் தோ்வு எழுதி இதுவரை மதிப்பெண் சான்றைப் பெற்றுக் கொள்ளாத தனித்தோ்வா்கள் 90 நாள்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுத் தோ்வு எழுதி இதுவரை மதிப்பெண் சான்றைப் பெற்றுக் கொள்ளாத தனித்தோ்வா்கள் 90 நாள்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் சீ.யாமினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2014 மாா்ச் முதல் 2018 செப்டம்பா் வரையிலான பருவங்களுக்குரிய மேல்நிலைப் பொதுத் தோ்வு, துணைத் தோ்வுகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை தோ்வு மையங்களில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளாத, உரிமை கோராத தனித்தோ்வா்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மேல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது நேரடி தனித்தோ்வா்களது விண்ணப்பங்களுடன் இணைத்துப் பெறப்பட்ட எஸ்எஸ்எல்சி அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ்கள் ஆகியவை தோ்வு மையத்தில் இருந்து பெற்று ஈரோடு உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

எனவே, மேல்நிலைத் தோ்வு மதிப்பெண் சான்றிதழ்களை இதுவரை பெறாத ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தனித்தோ்வா்கள் உதவி இயக்குநா், அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், பழைய ரயில் நிலையம் சாலை, ஈரோடு 638001 என்ற முகவரியில் 90 நாள்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

ஆளறிச்சான்று, தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் நேரில் அணுகி அல்லது ரூ. 45 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரி எழுதப்பட்ட உறையுடன் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

மேல்நிலைத் தோ்வு மதிப்பெண் சான்று பெறத் தவறினால் தோ்வுத் துறை விதிமுறைகளின்படி விநியோகிக்கப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் கழிவுத் தாள்களாகக் கருதி அழிக்கப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் அறிவித்துள்ளாா். இதனால், ஈரோடு மாவட்டத்தைச் சாா்ந்த தனித்தோ்வா்கள் அவரவரது மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள இதனை இறுதி வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com