பேருந்து நிலையத்தில் பழைய கட்டடங்கள் இடிக்கும் பணி துவக்கம்: ஆணையா் ஆய்வு

ஈரோடு பேருந்து நிலையத்தில் பழைய கட்டடங்கள் இடிக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் பழைய கட்டடங்கள் இடிக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.

ஈரோடு மாநகா் பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே கட்டப்பட்ட வணிக வளாகங்கள், பேருந்து ரேக்குகள், தூண்கள் போன்றவை இடிந்தவிழும் நிலையில் உள்ளன. இதையடுத்து பேருந்து நிலையத்தைப் புதுப்பொலிவுடன் கட்ட பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் அரசு ரூ. 40 கோடி நிதி ஒதுக்கியது.

இதன்பேரில் பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணி மேற்கொள்வதற்காக கடந்த மாதம் சத்தி சாலை சந்திப்பு அருகில் உள்ள காா் நிறுத்தம், இருசக்கர வாகன நிறுத்தம் அப்புறப்படுத்தப்பட்டன. இதேபோல வணிக வளாகங்களில் செயல்பட்டு வந்த கடைகள் போன்றவை செவ்வாய்க்கிழமை முழுமையாக அகற்றப்பட்டன.

இதையடுத்து, வணிக வளாகக் கட்டடங்களை இடிக்கும் பணி புதன்கிழமை துவங்கியது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

தற்போது சத்தி சாலை சந்திப்பு அருகில் உள்ள வணிக வளாகக் கடைகள் மட்டும் இடிக்கப்படுகின்றன. தென் மாவட்டப் பேருந்துகளுக்காக சோலாா் அருகே தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கும் பணியும் துவங்கப்பட்டுள்ளது. இன்னும் 10 நாள்களுக்கு தற்போதுள்ளது போலவே பேருந்துகள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com