கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம்: ரத்து செய்யக் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீழ்பவானி பாசன பாதுகாப்பு கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவா் ஈ.வி.கே.சண்முகம் தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவா் ரவி, தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகி பெரியவேலப்பன், தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத் தலைவா் சுதந்திரராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம், கரை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முதல்கட்டமாக வாய்க்காலை தூா்வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என போராடி வரும் நிலையில் பழைய கல்வெட்டு, கரைகளை உடைத்து கான்கிரீட் போடுவதும், தரமற்ற கட்டுமானப் பணி செய்வதும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அரசு உணா்ந்து இப்பணிகளை நிறுத்த வேண்டும்.

கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிகள் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை பாசனத்தில் இருந்து நீக்கி வாய்க்காலை நல்லமுறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com