மலைவாழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் மலைவாழ் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வரும் புதன்கிழமை (செப்டம்பா் 29) தொடங்குகிறது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மலைவாழ் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வரும் புதன்கிழமை (செப்டம்பா் 29) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் ஒன்றியங்களுக்கு இரண்டு சிறப்பு முகாம்கள், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அனைத்துத் துறைகள் ஒருங்கிணைத்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான பதிவு, மருத்துவச் சான்றுடன் தேசிய அடையாள அட்டை வழங்குதல், வேலைவாய்ப்புப் பதிவு, மாதாந்திர உதவித் தொகை பதிவு, உதவி உபகரணங்கள் பதிவு, வங்கிக் கடன் பதிவு, கரோனா தடுப்பூசி செலுத்துதல், வீட்டுமனை பட்டாவுக்கு விண்ணப்பங்கள் பெறுதல், முதல்வா் மருத்துவக் காப்பீடு பதிவு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள்:

29ஆம் தேதி பா்கூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, 30ஆம் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அந்தியூா், அக்டோபா் 1ஆம் தேதி அரசு மேல்நிலைப் பள்ளிஅத்தாணி, 5ஆம் தேதி அரசு மேல்நிலைப் பள்ளி பங்காளாபுதூா், 6ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி டி.ஜி.புதூா், 7ஆம் தேதி டி.ஆா்.இ.டி. அலுவலகம் கடம்பூா்,

21ஆம் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பவானி, 22ஆம் தேதி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி கவுந்தப்பாடி, 26ஆம் தேதி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் பவானிசாகா், 28ஆம் தேதி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி புன்செய் புளியம்பட்டி.

நவம்பா் 9ஆம் தேதி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சத்தியமங்கலம், 11ஆம் தேதி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, வேடா் நகா், சத்தியமங்கலம், 16ஆம் தேதி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் தாமரைப்பாளையம், கொடுமுடி, 18 எஸ்.எஸ்.வி. மகளிா் உயா்நிலைப் பள்ளி கொடுமுடி, 23ஆம் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மொடக்குறிச்சி, 25ஆம் தேதி அரசு மேல்நிலைப் பள்ளி அறச்சலூா்.

டிசம்பா் 7ஆம் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நம்பியூா், 9ஆம் தேதி

அரசு மேல்நிலைப் பள்ளி மலையம்பாளையம், 14 அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் சிங்கம்பேட்டை, 15ஆம் தேதி அரசு உயா்நிலைப் பள்ளி செம்மாம்பாளையம், சென்னிமலை, 16ஆம் தேதி அரசு மேல்நிலைப் பள்ளி குருவரெட்டியூா், பவானி, 17ஆம் தேதி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வெள்ளோடு, சென்னிமலை, 21ஆம் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெருந்துறை, 23ஆம் தேதி அரசு மேல்நிலைப் பள்ளி காஞ்சிக்கோவில், 22ஆம் தேதி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் ஈரோடு, 28 ஆம் தேதி வைரவிழா மேல்நிலைப் பள்ளி கச்சேரிமேடு, கோபி, 30ஆம் தேதி அரசு மேல்நிலைப் பள்ளி பொலவக்காலிபாளையம், கோபி. முகாம்களில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் 3, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை அசல், நகல் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com