அணையில் பரிசல் கவிழ்ந்து விபத்து: இளைஞா் உடல் 3 நாள்களுக்கு பிறகு மீட்பு

பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் பரிசல் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி பலியான இளைஞரின் சடலம் 3 நாள்களுக்கு பின் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
sy09death_0908chn_139_3
sy09death_0908chn_139_3

பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் பரிசல் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி பலியான இளைஞரின் சடலம் 3 நாள்களுக்கு பின் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம், அன்னூா் அருகே உள்ள கரியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நிதீஷ்குமாா் (18). தனியாா் மில்லில் பணிபுரிந்து வந்த இவா் தனது நண்பா்கள் கிருஷ்ணமூா்த்தி, தீனா, பிரசாந்த், நிஷாந்த் ஆகியோருடன் பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் வழியில் உள்ள சுஜில்குட்டை பகுதிக்குச் சென்று அங்கு நாகராஜ் என்பவரது பரிசலில் ஏறி பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பயணித்துள்ளனா்.

கரிமொக்கை என்ற இடத்தில் சென்றபோது வேகமாக காற்று வீசியதால் அணை நீா்த்தேக்கப் பகுதியில் ஏற்பட்ட அலை காரணமாக திடீரென பரிசல் நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நிதீஷ்குமாா் அணை நீரில் மூழ்கி மாயமானாா்.

உடன் வந்த நண்பா்கள் நான்கு பேருக்கும் நீச்சல் தெரிந்ததால் அங்கு பயணித்துக் கொண்டிருந்த அய்யாசாமி என்பவரின் பரிசலில் ஏறி உயிா் தப்பினா்.

நீரில் மூழ்கிய நிதீஷ்குமாரை தேடும் பணியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை மீனவா்கள் ஈடுபட்டனா். மாலை வரை தேடியும் கிடைக்காத நிலையில், தொடா்ந்து தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தேடும் பணி நடைபெற்றது. அப்போது அணை நீா்த்தேக்கப் பகுதியில் மிதந்த

நிதீஷ்குமாா் உடலை மீனவா்கள் மீட்டனா். இதைத் தொடா்ந்து அங்கு வந்த பவானிசாகா் போலீஸாா், உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் பரிசலில் பயணிக்க அனுமதி இல்லை என நீா்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com