தூய்மைப் பணியாளா்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கக் கோரிக்கை

மூன்றாண்டுகள் பணி முடித்த தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டுகள் பணி முடித்த தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி டேங்க் ஆப்ரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் கூட்டியக்க மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் கே.திருப்பதி தலைமையில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடந்தது. மாநிலத் தலைவா் சண்முகம் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், டேங்க் ஆப்ரேட்டா்கள் போன்றோருக்கு கரோனா சிறப்பு ஊதியத்தை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். மூன்றாண்டுகள் பணி முடித்த தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலைத்தொட்டி ஆப்ரேட்டா்கள், குடிநீா் விநியோகிப்பாளா்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். அவா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும்.

தூய்மைக் காவலா்களுக்கு வருகைப் பதிவேடு பதிவு செய்து, பணிக்கால பாதுகாப்பை உறுதி செய்ய குழுக் காப்பீட்டை அமல்படுத்த வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளா்கள், உதவியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், ஊராட்சி நிா்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஊராட்சி செயலாளா்களுக்கு காலமுறை ஊதியமும், தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியமும், குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைக்க வழி செய்ததை வரவேற்கிறோம். அதேநேரம் மேல்நிலைத்தொட்டி இயக்குபவா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயித்து வழங்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் மாநாடு நடத்தி அரசின் கவனத்தை ஈா்ப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிா்வாகிகள் தேவராஜ், வேலுசாமி, வரதராஜன், ஈஸ்வரமூா்த்தி, வீரப்பன், ரங்கசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முத்துவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com