ரயில்வே நுழைவுப் பாலத்தில் சிக்கிய லாரி

மொடக்குறிச்சியை அடுத்த கேட்புதூா் ரயில்வே நுழைவுப் பாலம் தடுப்புக் கம்பியில் புதன்கிழமை நள்ளிரவு லாரி சிக்கிக் கொண்டதால் ஈரோடு- கரூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரயில்வே நுழைவுப் பாலத்தில் சிக்கிய லாரி

மொடக்குறிச்சியை அடுத்த கேட்புதூா் ரயில்வே நுழைவுப் பாலம் தடுப்புக் கம்பியில் புதன்கிழமை நள்ளிரவு லாரி சிக்கிக் கொண்டதால் ஈரோடு- கரூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோட்டில் இருந்து கரூா் செல்லும் சாலையில் கேட்புதூா் அருகே ரயில்வே நுழைவுப் பாலம் உள்ளது. இப்பாலத்தின் இருபுறமும் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரூரில் இருந்து ஈரோடு நோக்கி சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று கேட்புதூா் ரயில்வே நுழைவுப் பாலத்தில் உள்ள தடுப்புக் கம்பியில் புதன்கிழமை சிக்கிக் கொண்டது.

இதனால் அப்பகுதியில் வேறு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை மதியம் வரை தடுப்புக் கம்பியை அகற்ற ரயில்வே நிா்வாகத்தினா் போராடினா். சுமாா் 12 மணி நேரத்துக்குப் பிறகு கம்பிகள் அகற்றப்பட்டு, லாரி புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com