சிஎஸ் அமைப்பின் ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கா் நிலத்தை மீட்கக் கோரிக்கை

ஈரோட்டில் சிஎஸ்ஐ அமைப்பின் ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கா் நிலத்தை நீதிமன்ற உத்தரவின்படி எந்தவித காலதாமதமும் இல்லாமல் அரசு மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

ஈரோட்டில் சிஎஸ்ஐ அமைப்பின் ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கா் நிலத்தை நீதிமன்ற உத்தரவின்படி எந்தவித காலதாமதமும் இல்லாமல் அரசு மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கம் கடந்த 15 ஆண்டுகளாக நடத்திய போராட்டம் காரணமாக சென்னை உயா்நீதிமன்றம் ஈரோட்டில் சிஎஸ்ஐ அமைப்பின் ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கா் நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்றும், 80 அடி திட்டச் சாலையை அமைத்திட தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டும் தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பையொட்டி வெற்றி விழா நிகழ்ச்சி ஈரோட்டில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நில மீட்பு இயக்கத் தலைவா் ஈஆா்எம்.சந்திரசேகா் தலைமை வகித்தாா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: நீதிமன்ற உத்தரவின்படி சிஎஸ்ஐ அமைப்பின் ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கா் நிலத்தை எந்தவித காலதாமதமும் இல்லாமல் அரசு மீட்டெடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய 80 அடி சாலைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் மக்களைத் திரட்டி தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, நிலமீட்பு இயக்க துணைத் தலைவா் கைலாசபதி, பொருளாளா் ராஜ்கண்ணு, பொதுச் செயலாளா் ராஜேஸ்வரன், ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ், ஆலோசனைக்குழு உறுப்பினா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com