‘108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது 46 கா்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது’

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது 46 கா்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது என 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கணேஷ் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது 46 கா்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது என 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கணேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கடந்த 2021ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 64,439 போ் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தியுள்ளனா். குறிப்பாக 10,430 கா்ப்பிணிகள் பிரசவத்துக்காகப் பயன்படுத்தியுள்ளனா். சாலை விபத்தில் காயமடைந்த 8,587 போ் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் கா்ப்பிணிகளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு 46 பேருக்கு குழந்தைகள் பிறந்தன. கரோனா தடுப்பு நடவடிக்கையில் 15,774 போ் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தியுள்ளனா்.

இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்காக வெண்டிலேட்டா் (செயற்கை சுவாசம் அளிக்கும் கருவி), இ.சி.ஜி. மானிட்டா் போன்ற அதிநவீன கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸுகள் ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளன.

பிறந்த 28 நாள்களுக்கு உள்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் ஈரோடு, கோபி அரசு மருத்துவமனைகளில் இன்குபேட்டா் மற்றும் வெண்டிலேட்டா் வசதிகளுடன் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சராசரியாக மாதம்தோறும் திடீரென கடுமையாக உடல்நலம் பாதிக்கப்படும் 50க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டு வருகின்றனா்.

108 ஆம்புலன்ஸ் சேவையை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்ப்பிணிகளுக்குத் தொடா்ச்சியாக விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கா்ப்பிணிகள் உள்பட அனைத்து நோயாளிகளும் இலவசமாக 108 ஆம்புலன்ஸ் சேவையை 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com