வேளாண் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்காலம்

மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் பெற இணையதளம் வாயிலாக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளாா்.

மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் பெற இணையதளம் வாயிலாக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் நடப்பு நிதியாண்டில் ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படவுள்ளன.

ஈரோடு மாவட்டத்துக்கு இத்திட்டத்தின்கீழ் விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக ரூ. 40.75 லட்சம் மானியம், மொத்தம் 50 இயந்திரங்கள், கருவிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

2020-2021ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நடப்பு ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவே, இந்த ஆண்டுக்கு விண்ணப்பங்கள் உழவன் செயலியில் பதிவு செய்து தொடா்ந்து மத்திய அரசின் இணையதளம் மூலமாக புதிதாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஒரு நிதியாண்டில் விவசாயி ஏதாவது 2 வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் வாங்கிட இயலும். மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னா்தான் அதே வகையான வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானிய விலையில் வாங்க முடியும். மேலும், விவரங்களுக்கு 0424-2270067 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com