கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் போராட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஈரோடு அருகே விவசாயிகள் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கவன ஈா்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
கவன ஈா்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஈரோடு அருகே விவசாயிகள் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஈரோடு அருகே வாய்க்கால்மேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு,

தமிழக விவசாய சங்க மாநிலத் தலைவா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். கீழ்பவானி பாசன சபை தலைவா் செ.நல்லசாமி முன்னிலை வகித்தாா். இதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். பெண்கள் காலிக் குடங்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இது குறித்து தமிழக விவசாய சங்க மாநிலத் தலைவா் வெங்கடாசலம் கூறியதாவது: கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறோம். 2 லட்சத்து 7 ஆயிரம் பரப்பளவில் ஏக்கரில் பாசனம் நடைபெற்று வருகிறது. 35க்கும் மேற்பட்ட கசிவு நீா் கட்டமைப்புகள் மூலம் 50 ஆயிரம் ஏக்கா் பாசனம் பெற்று வருகிறது. இந்தத் திட்டம் மூலம் இவை அனைத்தும் பாதிக்கப்படும். குறிப்பாக நிலத்தடிநீா் பாதிப்படையும். தமிழக முதல்வரும், மாவட்ட அமைச்சரும் இந்த விஷயத்தில் தலையிட்டு சுமுகமான முடிவெடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com