கோபி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 125 பேருக்கு கடனுதவி

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 125 பேருக்கு சுமாா் ரூ.40 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை முன்னாள் அமைச்சரும், கோ
g27loan_2705chn_134_3
g27loan_2705chn_134_3

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 125 பேருக்கு சுமாா் ரூ.40 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை முன்னாள் அமைச்சரும், கோபி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டுவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் உறுப்பினா்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் தகுதியின் அடிப்படையில் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நாகதேவன்பாளையம், சிறுவலூா், கொளப்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் நடைமுறை மூலதன கால்நடை பராமரிப்பு, கன்று வளா்ப்பதற்கான கடன் உதவிகள் வழங்கும் விழா அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு, நாகதேவன்பாளையத்தில் 22 பேருக்கு ரூ.8.68 லட்சம் மதிப்பிலான கன்று வளா்ப்பு கடன் உதவிகளையும், சிறுவலூரில் 32 பேருக்கு ரூ.12.60 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், கொளப்பலூரில் 71 பேருக்கு ரூ.19.46 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அதிமுக மக்களவை உறுப்பினா் சத்தியபாமா, கட்சி நிா்வாகிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Image Caption

பயனாளிக்கு காசோலையை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.கே.செங்கோட்டையன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com