கனரா வங்கி பணியாளா்களுக்கு தமிழ்மொழி பயிற்சி

கனரா வங்கியில் பணியாற்றும் பிற மாநில பணியாளா்களுக்கு தமிழ்மொழியில் பேச பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்மொழி பயிற்சியில் பங்கேற்ற கனரா வங்கி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள்.
தமிழ்மொழி பயிற்சியில் பங்கேற்ற கனரா வங்கி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள்.

கனரா வங்கியில் பணியாற்றும் பிற மாநில பணியாளா்களுக்கு தமிழ்மொழியில் பேச பயிற்சி அளிக்கப்பட்டது.

கிளை ஊழியா்கள் உள்ளூா் மொழியில் பேசுவதை உறுதிசெய்ய வேண்டும் என நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி கனரா வங்கி ஈரோடு மண்டல அலுவலகத்தில் பிற மாநிலத்தைச் சோ்ந்த பணியாளா்களுக்கு தமிழ்மொழி பயிற்சி கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற்றது.

பயிற்சியை கனரா வங்கி உதவிப் பொதுமேலாளா் ஒய்.சங்கா் துவக்கிவைத்தாா். மண்டல கோட்ட மேலாளா் ஏ.ஜி.அசோக்குமாா், முன்னோடி வங்கி மாவட்ட மேலாளா் ஜி.ஆனந்தகுமாா் ஆகியோா் வட்டார மொழி கற்றுக்கொள்வதன் அவசியம், வாடிக்கையாளா்களை அணுகும் முறையில் வட்டார மொழியின் பயன்கள் குறித்து பேசினா்.

பயிற்சியாளா் பேபி பட்டு வங்கிப் பணியாளா்களுக்கு தமிழ்மொழி பயிற்சி அளித்தாா். இதில் ஈரோடு மண்டலத்தில் பணியாற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த 70 பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com