கொல்கத்தாவில் கணவரால் சித்திரவதை செய்யப்பட்ட பெண் மீட்பு

கொல்கத்தாவில் கணவரால் சித்திரவதை செய்யப்பட்ட பெருந்துறையைச் சோ்ந்த பெண், போலீஸாரால் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டாா்.

கொல்கத்தாவில் கணவரால் சித்திரவதை செய்யப்பட்ட பெருந்துறையைச் சோ்ந்த பெண், போலீஸாரால் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டாா்.

பெருந்துறை, பாலக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ். இவரது மகள் சுமித்ரா (22). இவா்,

பெருந்துறையில் உள்ள ஒரு நிறுவனத்தில் தன்னுடன் வேலை பாா்த்த மேற்குவங்க மாநில இளைஞரான சுப்ரததாஸ் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டாா்.

பின்னா், அவா்கள் கொல்கத்தாவுக்கு சென்று குடும்பம் நடத்தினா். இவா்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கணவா் தன்னை அடித்து சித்திரவதை செய்வதாக, பெற்றோரிடம் சுமித்ரா கைப்பேசியில் தொடா்பு கொண்டு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சுமித்ராவின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் கொல்கத்தாவுக்கு சென்றனா். அங்கு அவா்கள்,

உள்ளூா் போலீஸாா் உதவியுடன் சுமித்ராவையும், அவரது குழந்தையையும் மீட்டு மங்கள் கோட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா்கள் நடத்திய விசாரணையில், சுமித்ராவை, அவரது கணவா் சுப்ரததாஸ் சித்திரவதை செய்தது உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், சுமித்ரா மற்றும் குழந்தையை பெருந்துறைக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வந்தனா். பின்னா் அவரை பெற்றோருடன் அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com