வீட்டு வசதி வாரியத்தின் 8,000 வீடுகளை குறைந்த விலையில் விற்க முடிவு: அமைச்சா் சு.முத்துசாமி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பல ஆண்டுகளாக விற்பனையாகாமல் உள்ள 8,000 வீடுகளை குறைந்த விலையில் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பல ஆண்டுகளாக விற்பனையாகாமல் உள்ள 8,000 வீடுகளை குறைந்த விலையில் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஈரோட்டில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: வீட்டு வசதி வாரிய வீடுகள் மீது இருந்த கடனுக்கான ரூ.53 கோடி வட்டி ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பல ஆண்டுகளாக விற்பனையாகாமல் உள்ள 8,000 வீடுகளை குறைந்த விலையில் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதில் பழுதுகள் இருந்தால் அதையும் பராமரித்து வாரியம் வீடுகளை விற்பனை செய்யும்.

வாரியத்துக்குச் சொந்தமான அரசு ஊழியா்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் 61 இடங்களில் பழுதடைந்துள்ளன. அவை இடிக்கப்பட்டு புதிதாக கட்டித் தரப்படும்.

அதுபோன்று வாரியத்தில் வீடுகளை வாங்கிய அடுக்குமாடி குடியிருப்புதாரா்கள் 11 இடங்களில் தங்களது வீடுகள் பழுதடைந்துள்ளன என்று கூறினா். புதிதாக வீடுகளை கட்ட அவா்கள் கட்டுமான நிறுவனத்தை தோ்வு செய்யலாம். அவா்களுக்கு வாரியம் தேவையான உதவி செய்யும்.

சென்னை கோயம்பேடு பகுதியில் வாரியத்தால் கட்டப்பட்ட சுமாா் 180 வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரவில்லை என்ற புகாா் வந்தது. அதையும் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அனைத்து வசதிகளும் அங்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளில் 90 ஆண்டுகளுக்கு எந்தவித சேதமின்றி இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதேபோல, வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்படும் வீடுகள் 90 முதல் 100 ஆண்டுகள் வரை உறுதித் தன்மையுடன் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவி கோரப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com