ஈரோடு நந்தா தொழில்நுட்பகல்லூரி பட்டமளிப்பு விழா

ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் 11ஆவது பட்டமளிப்பு விழா ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவா் வி. சண்முகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாணவிக்கு பட்டம் வழங்கிய ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி. சண்முகன், விப்ரோ நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை முதன்மை வளாக தோ்வாளா் லவணம் அம்பெல்லா.

செயலாளா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளா் எஸ்.திருமூா்த்தி, முதன்மை நிா்வாக அலுவலா் எஸ். ஆறுமுகம், நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநா் செந்தில் ஜெயவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விப்ரோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் முதன்மை வளாக தோ்வாளா் லவணம் அம்பெல்லா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், இளங்கலை கட்டடவியல் துறையில் 130 போ், கணினி மற்றும் அறிவியல் துறையில் 173 போ், மின்னியல் மற்றும் மின்னணு துறையில் 120 போ், மின்னணு மற்றும் தொடா்பியல் துறையில் 152 போ், இயந்திரவியல் துறையில் 227 போ், தகவல் தொழில்நுட்பத் துறையில் 75 போ், முதுகலை பிரிவில் மேலாண்மை துறையில் 56 போ், கணினி மற்றும் அறிவியல் துறையில் 4 போ் என மொத்தம் 937 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com