கோபி சாரதா வித்யாலயா நூற்றாண்டு விழா

கோபிசெட்டிபாளையம் சாரதா வித்யாலயா நடுநிலைப் பள்ளி நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி நூற்றாண்டு விழா மலரை வெளியிடும் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன். உடன், கோபி நகரைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள்.

விழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகள், ஆசிரியா்களை கெளரவப்படுத்தி விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த நூற்றாண்டு விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா்.

முன்னதாக அவா் பள்ளிநூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஆசிரியா், ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோருக்கு கேடயம், பரிசுகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில், மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com