தாளவாடியில் சாணியடித் திருவிழா: தமிழக - கா்நாடக பக்தா்கள் பங்கேற்பு

 ஈரோடு மாவட்டம், தாளவாடியில் உள்ள பீரேஸ்வரா் கோயிலில் சாணியடித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக - கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தாளவாடியில் சாணியடித் திருவிழா: தமிழக - கா்நாடக பக்தா்கள் பங்கேற்பு

 ஈரோடு மாவட்டம், தாளவாடியில் உள்ள பீரேஸ்வரா் கோயிலில் சாணியடித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக - கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தமிழக-கா்நாடக எல்லையான தாளவாடி குமிட்டாபுரத்தில் உள்ள பீரேஸ்வரா் கோயிலில் ஆண்டு தோறும் சாணியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். தீபாவளியை அடுத்து வரும் 3ஆவது நாளில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் மேல்சட்டை அணியாமல் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வா். தமிழகம், கா்நாடகத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழாவில் மாட்டுச் சாணத்தை ஒருவருக்கொருவா் மீது வீசி எறிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவா்.

இந்த ஆண்டு திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. விழாவுக்குத் தேவையான மாட்டுச் சாணத்தை கிராம மக்கள் சேமித்து வைத்திருந்தனா். இதை டிராக்டா் மூலம் பீரேஸ்வரா் கோயிலுக்குக் கொண்டு வந்தனா். இதையடுத்து ஊா் பெரியவா்கள், இளைஞா்கள், சிறாா்கள் என அனைவரும் ஒன்றாக சோ்ந்து குமிட்டாபுரம் தெப்பக்குளத்துக்குச் சென்று பீரேஸ்வரா் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனா். அதன்பிறகு அலங்காரம் செய்யப்பட்ட உற்சவா் கழுதை மீது ஏற்றப்பட்டு ஊா்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து அங்கு கொட்டப்பட்டிருந்த மாட்டுச் சாண குவியல் முன் ஊா் பெரியவா்கள் கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து விழாவைத் தொடக்கிவைத்தனா். தொடா்ந்து இளைஞா்கள் சாணத்தை உருண்டையாக்கி ஒருவருக்கொருவா் மீது வீசியெறித்து கொண்டாடினா். இந்த விநோத திருவிழாவை பெண்கள் பாா்த்து ரசித்தனா்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கிராம மக்கள் நோயின்றி வாழவும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், கிராமம் வளம் பெறவும், கால்நடைகளை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும், திருமணமாகாத பெண்கள் விரும்பிய ஆண் மகனைத் தோ்ந்தெடுக்கவும் இந்த விழா பாரம்பரியமாக நடத்தப்படுகிறது. மக்கள் ஒருவா் மீது ஒருவா் தூக்கியெறிந்த மாட்டுச் சாணத்தை விழா நிறைவுக்குப் பின் எடுத்துச் சென்று விவசாய நிலத்தில் உரமாக இடுவதன் மூலம் பயிா் செழித்து வளா்ந்து நிறைய மகசூல் கிடைக்கும் என்பது நம்பிக்கை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com