பவானிசாகா் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கனஅடியும், ஆற்றில் 700 கனஅடி என மொத்தம் 3,100 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 30.31 டிஎம்சி.