நூல் விலை உயா்வைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்
By DIN | Published On : 08th April 2022 02:13 AM | Last Updated : 08th April 2022 02:13 AM | அ+அ அ- |

சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், நூல் விலை உயா்வைக் கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளா்கள் சங்கக் கூட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்சமயம் நூல் விலை மிக அதிகமாக உயா்ந்துள்ளதைக் கண்டித்தும், நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.