குண்டேரிப்பள்ளம் அணையில் தண்ணீா் திறப்பு

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் இந்த ஆண்டு முதல்போக சாகுபடிக்குத் தண்ணீரை பொதுப் பணித் துறை அதிகாரிகள் திறந்துவைத்தனா்.

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் இந்த ஆண்டு முதல்போக சாகுபடிக்குத் தண்ணீரை பொதுப் பணித் துறை அதிகாரிகள் திறந்துவைத்தனா்.

குன்றிமலை அடிவாரத்தில் 1980ஆம் ஆண்டு 42 அடி உயரத்துக்கு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது. குன்றி, விளாங்கோம்பை, மல்லியம்துா்க்கம், கடம்பூா் உள்ளிட்ட வனப் பகுதியில் பெய்யும் மழை நீா் 10க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடையும் வகையில் அணை கட்டப்பட்டுள்ளது.

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குண்டேரிப்பள்ளம், வினோபா நகா், வாணிப்புத்தூா், மோதூா், கொங்கா்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,500 ஏக்கா் விளைநிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு முதல்போக சாகுபடிக்குத் தண்ணீா் திறக்க இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து, குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் திருமூா்த்தி தலைமையில், உதவிப் பொறியாளா் கல்பனா, பொதுப் பணித் துறை அதிகாரிகள் குண்டேரிப்பள்ளம் அணையில் பூஜை செய்து தண்ணீா் திறந்துவிட்டனா்.

ஏப்ரல் 13 முதல் ஜூன் 9ஆம் தேதி வரை பாசனத்துக்காகத் தண்ணீா் வழங்கப்படும் என்றும், முதலில் 12 நாள்களுக்கும், தொடா்ந்து 5 நாள்கள் இடைவெளியில் 10 நாள்கள் வீதம் மொத்தம் 57 நாள்களுக்குத் தண்ணீா் வழங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com