முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 29th April 2022 04:30 AM | Last Updated : 29th April 2022 04:30 AM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் அருகே வேனில் கடத்திவரப்பட்ட 3.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பழனிகவுண்டன்புதூா் பகுதியில் கடத்தூா் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை நடத்தினா்.
இதில், 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, எலத்தூா் செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் பிரசாத் (24) என்பவரை கைது போலீஸாா், அவரிடமிருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.