மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பதே அரசின் கொள்கை: அமைச்சா் சு.முத்துசாமி

மதுக்கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும் என்பதே அரசின் கொள்கை என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பதே அரசின் கொள்கை: அமைச்சா் சு.முத்துசாமி

மதுக்கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும் என்பதே அரசின் கொள்கை என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

போதைப் பொருள் தடுப்பு மற்றும் போதைப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஈரோடு ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். மேயா் சு.நாகரத்தினம், எம்எல்ஏ திருமகன் ஈவெரா, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா, துணை மேயா் செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் கே.நவமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைக் கல்வி அலுவலா் அய்யண்ணன், உறுதிமொழியை படிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

விழிப்புணா்வுப் பேரணியை அமைச்சா் சு.முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தாா். அப்போது அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

போதைப் பொருள்கள் விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவா்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். மாவட்ட எல்லை, சுங்கச்சாவடி, பேருந்து, ரயில் நிலையங்கள் வழியாக போதைப் பொருள்கள் கொண்டு செல்வது கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டோா் மனம் திருந்தி வந்தால் அவா்களுக்கு தனியாா் பங்களிப்புடன் மறுவாழ்வு ஏற்படுத்தி தரப்படும்.

மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பது அரசின் கொள்கையாகும். திடீரென மூடினால் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் அருகே மதுக்கடை இருந்தால் அவற்றை மூட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். ஈரோட்டுக்கு வரும் ஆகஸ்ட் 25, 26இல் முதல்வா் வருகிறாா். இந்த மாவட்டத்துக்காக திட்டமிடப்பட்ட 145 திட்டங்களில் 85 திட்டங்கள் இதுவரை அரசால் பரிசீலிக்கப்பட்டு முதல்வரால் துவக்கிவைக்கப்படும். 60 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் வழங்க உள்ளாா். பவானிசாகா் அணை நிரம்பியுள்ளதால் கடந்த புதன்கிழமை மாலை கீழ்பவானி கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் உபரி நீா் பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது. இருப்பினும் கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு அதிகாரப்பூா்வமாக வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com