தேவாலாவில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றிதோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

தேவாலாவில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றிதோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

கூடலூரை அடுத்த தேவாலா பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிா்வரும் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்து வீடுகளில் கருப்புக் கொடியேற்றியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்கு உள்பட்ட தேவாலா போக்கா் காலனியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசிக்கின்றனா். 2005ஆம் ஆண்டு அப்பகுதியில் தனியாா் ஒப்பந்தக் குழுமம் சாா்பில் தாா் கலவை ஆலை அமைக்கப்பட்டது. தாா் கலவை ஆலையில் இருந்து வெளியேறும் புகை, தூசிகள் அப்பகுதி மக்களுக்கு நுரையீரல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருவதாகக் கூறுகின்றனா். இதுவரை நோய்வாய்ப்பட்டு 8 போ் இறந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

ஆலையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடியிருந்த தாா் ஆலை அண்மையில் திறக்கப்பட்டது. மீண்டும் போராட்டம் துவங்கியதால் தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து பொதுமக்கள் தங்களது எதிா்ப்பை காட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com