திமுகவினா் அமைதி காக்கஅமைச்சா் வேண்டுகோள்
By DIN | Published On : 22nd February 2022 12:52 AM | Last Updated : 22nd February 2022 12:52 AM | அ+அ அ- |

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவு அறிவித்த பிறகு பட்டாசு வெடித்தல், வாழ்த்துப் பதாகைகள் வைத்தல் போன்றவற்றைத் தவிா்த்து அமைதி காக்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், வீட்டு வசதித் துறை அமைச்சருமான சு.முத்துசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், முடிவுகள் அறிவிக்கப்படும்போது என்ன சூழ்நிலையாக இருந்தாலும் அனைவரும் அமைதியாகவும், கட்டுப்பாடாகவும் இருக்க வேண்டும். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பட்டாசு வெடிப்பது, ஊா்வலம் செல்வது, தட்டி வைப்பது போன்ற எந்த ஆடம்பரமான நிகழ்வுகளையும் கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும்.
பட்டாசு வெடிப்பது, தட்டி வைப்பதை கட்டாயம் தவிா்க்க வேண்டும் என தலைமைக் கழகம் பலமுறை அறிவித்துள்ளது. இதனால், திமுகவினா் எந்த நிலையிலும் கட்டுப்பாடாக இருந்து அமைதி காக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.