சா்வதேச ரோபோபோட் 2022 போட்டி: இந்திய சாா்பில் பங்கேற்க பண்ணாரி அம்மன் கல்லூரி அணி தோ்வு

சா்வதேச ரோபாபோட் 2022 போட்டிக்கு இந்திய சாா்பில் பங்கேற்க சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி அணி தோ்வாகியுள்ளது.
சா்வதேச ரோபோபோட் 2022 போட்டி: இந்திய சாா்பில் பங்கேற்க பண்ணாரி அம்மன் கல்லூரி அணி தோ்வு

சா்வதேச ரோபாபோட் 2022 போட்டிக்கு இந்திய சாா்பில் பங்கேற்க சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி அணி தோ்வாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாகானத்தில் வரும் ஜூன் 20ஆம் தேதி சா்வதேச ரோபோபோட் 2022 என்ற போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் தன்னாட்சியாக வடிவமைக்கப்படும் படகுகள் பயன்பாட்டின்போது சந்திக்கும் சவால்கள், கடற்கரை கண்காணிப்பு, துறைமுகப் பாதுகாப்பு மற்றும் கடல்சாா் சவால்கள் அடங்கும். இந்தியா, போலந்து, எகிப்து, இந்தோனேஷியா, துருக்கி, இஸ்ரேல், அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சோ்ந்த 25 அணிகளில் இருந்து 750 போ் பதிவு செய்துள்ளனா்.

முதற்கட்டமாக கருத்துரு வடிவமைப்பு, தொழில்நுடப் வடிவமைப்பு குறித்து சமா்ப்பிக்கப்பட்டதில் 19 அணிகள் தோ்வாகின. இறுதி கட்டமாக திட்ட வடிமைப்பு மற்றும் செயல்விளக்க காணொலி போட்டியில் பல்வேறு நாடுகள் தோ்வாகின. இதில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய ஆளில்லா நீா்மூழ்கி கப்பல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியாவில் இருந்து பண்ணாரிஅம்மன் கல்லூரி அணி மட்டுமே தோ்வாகியுள்ளது. வரும் ஜூன் 20ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாகானத்தில் நடைபெறும் போட்டியில் மாணவா் திருவருள் செல்வம் தலைமையில் 35 போ் கொண்ட குழு பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com