பெருந்துறையில் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு
By DIN | Published On : 16th June 2022 10:36 PM | Last Updated : 16th June 2022 10:36 PM | அ+அ அ- |

பெருந்துறையில் திறக்கப்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குத்து விளக்கேற்றி பணிகளை துவக்கிவைக்கிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகன். உடன் காவல் துறை அதிகாரிகள்.
பெருந்துறையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறுந்துவைத்தாா்.
காவல் துறை சாா்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிா் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிா் காவல் நிலையங்களை சென்னை தலைமை செயலாகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறை உட்கோட்டத்தில் பெருந்துறையில் அமைக்கப்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலையத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
பெருந்துறையில் திறக்கப்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் குத்து விளக்கேற்றி பணிகளை துவக்கிவைத்தாா். இதில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி, பெருந்துறை காவல் உட்கோட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளா் கெளதம்கோயல், பெருந்துறை காவல் ஆய்வாளா் மசூதாபேகம் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.