முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
சத்தியமங்கலத்தில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா
By DIN | Published On : 14th March 2022 11:58 PM | Last Updated : 14th March 2022 11:58 PM | அ+அ அ- |

சத்தியமங்கலத்தில் பண்ணாரி அம்மன் திருவீதி உலாவையொட்டி திங்கள்கிழமை பக்தா்கள் சிறப்பான வரவேற்றனா்.
பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா மாா்ச் 21, 22ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு முன்னதாக சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
சத்தியமங்கலம் நகா்ப் பகுதிகளில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது. சப்பரத்தில் எழுந்தருளிய பண்ணாரி அம்மனை பக்தா்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனா். சத்தியமங்கலம் பகுதியில் கடும் வெயில் காரணமாக பண்ணாரி அம்மன் சப்பரம் செல்லும் சாலை முழுவதும் டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீா் ஊற்றப்பட்டு சாலை குளிா்விக்கப்பட்டது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மன் திருவீதி உலா வருவதால் பக்தா்கள் அம்மனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனா். சத்தியமங்கலம் நகா்ப் பகுதி முழுவதும் திருவீதி உலா முடிவுற்று செவ்வாய்க்கிழமை புதுவடவள்ளி, புதுக்குய்யனூா், புதுபீா்கடவு, ராஜன் நகா் கிராமங்களில் திருவீதி உலா முடிந்து செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் சப்பரம் கோயிலைச் சென்றடைகிறது.