மல்லிகைப் பூ கிலோ ரூ.800-க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

ரம்ஜான் பண்டிகை மற்றும் அட்சய திருதியை விசேஷங்களை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 800க்கு விற்பனையானது. விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ரம்ஜான் பண்டிகை மற்றும் அட்சய திருதியை விசேஷங்களை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 800க்கு விற்பனையானது. விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மல்லிகைப் பூ பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மல்லிகைப் பூக்கள் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ரம்ஜான் பண்டிகை, அட்சயதிருதியை உள்ளிட்ட விசேஷ தினங்களை முன்னிட்டு மல்லிகை பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.500க்கு விற்பனையான நிலையில் திங்கள்கிழமை விலை அதிகரித்து கிலோ ரூ.800க்கு விற்பனையானது.

மல்லிகை பூக்களை வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்கி விற்பனைக்கு அனுப்பிவைத்தனா். இதேபோல மாலை தொடுக்க பயன்படுத்தப்படும் சம்பங்கிப்பூ கிலோ ரூ.40க்கு விற்பனையானது. மல்லிகைப் பூ விலை அதிகரித்து கிலோ ரூ. 800க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com