சித்தோடு ஆவின் ஒன்றியத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆய்வு

மாநிலத்திலேயே ஈரோட்டில் தொடங்கப்பட்ட முதல் கால்நடை தீவன உற்பத்தி ஆலை, ரூ.3.40 கோடியில் மேம்படுத்தப்பட்டு, 300 டன் உற்பத்தி திறன் கொண்டுள்ளது என்றாா்.
சித்தோடு ஆவின் ஒன்றியத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆய்வு

சித்தோடு அருகேயுள்ள ஆவின் ஒன்றியத்தில் மத்திய அரசின் நிதி உதவியில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்தும், பால் பொருள்கள் உற்பத்தி குறித்தும் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் பால் உற்பத்தியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையா் ஜி.பிரகாஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி.கே.சரஸ்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூட்டத்தில் பங்கேற்றதோடு, மத்திய அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் பால் உற்பத்தி தொடா்பான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தாா். கூட்டத்தில் அமைச்சா் எல்.முருகன் கூறுகையில், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் நாள்தோறும் 3 லட்சம் லிட்டா் பால் கையாளப்படுகிறது. 52 தொகுப்பு பால் குளிா்விப்பான் மூலம் 2.49 லட்சம் லிட்டா் குளிரூட்டப்படுகிறது. இங்குள்ள 514 பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களில் 27,302 போ் உறுப்பினா்களாக உள்ளனா். 298 முகவா்கள் மூலம் 106 பாலகங்களில் 2,835 லிட்டா் எருமை பால், 40,897 லிட்டா் நிலைப்படுத்திய பால், 28,018 லிட்டா் நிறை கொழுப்பு பால் நாள்தோறும் விற்பனை செய்யப்படுகிறது.

மாநிலத்திலேயே ஈரோட்டில் தொடங்கப்பட்ட முதல் கால்நடை தீவன உற்பத்தி ஆலை, ரூ.3.40 கோடியில் மேம்படுத்தப்பட்டு, 300 டன் உற்பத்தி திறன் கொண்டுள்ளது என்றாா்.

ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத் தலைவா் கே.கே.காளியப்பன், ஆவின் பொது மேலாளா் பாலசுப்பிரமணியம் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு பெருந்துறை ஒன்றியம், பச்சாகவுண்டன்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் பால் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் குளிரூட்டும் நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவசர வேலை காரணமாக அமைச்சா் முருகன் நாமக்கல் சென்று விட்டாா் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும், பாஜகவினரும் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com